பிப்ரவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ?
பிப்ரவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன.இதனையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது.
கொரோனா பரவல் குறைந்ததையடுத்து மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டனர்.
கடந்தாண்டு கொரோனா பரவல் குறைந்ததையடுத்து 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவ தொடங்கியதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு, 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
மற்ற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.