ஹிஜாப் சர்ச்சை எதிரொலி; கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை - முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

karnataka hijabcontroversy holidaydeclared bycm pasavarajbommai schoolsandcolleges tobeshut
By Swetha Subash Feb 08, 2022 11:21 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

கர்நாடகத்தில் மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மானவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி அங்கும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமறத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள ஜூனியர் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான விசாரணை இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,

கர்நாடகத்தில் மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

முன்னதாக, ஹிஜாப் சர்ச்சை மாணவர்களிடையே பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், கர்நாடக முதலமைச்சர்  மாணவர்கள் அமைதியை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.