நாளை பள்ளிகள் திறப்பு.., வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

Tamil nadu
By Yashini Jun 03, 2026 09:48 AM GMT
Report

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சேர்த்து சுமார் 55 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் வெயில் காரணமாக பள்ளி திறப்பு 3 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு நாளை (ஜூன் 4) திறக்கப்படுகின்றன.

நாளை பள்ளிகள் திறப்பு.., வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் | Schools Across Tamil Nadu Reopen Tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகால் நாளை திறக்கப்படுவதால் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.

அந்தவகையில், ஒரு மாதத்திற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அடிப்படையான வசதிகளை சீரமைக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி, பள்ளிகள் திறப்பை முன்னிட்டு பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், புதியதாக சேரும் மாணவர்களை வரவேற்கவும் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.