“ஸ்கூல் நேரத்துல வெளியே எங்கடா போற?” - ஷாக் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி

udhayanidhistalin anbilmaheshpoyyamozhi
By Petchi Avudaiappan Nov 16, 2021 09:05 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பள்ளி நேரத்தில் வெளியே சென்ற சிறுவனுக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், எம்.எல்.ஏ. உதயநிதியும் எதிரே வந்து அதிர்ச்சி கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி கோவை ஆனைமலை அருகே படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் பள்ளியை பார்வையிட சென்றனர்.

பள்ளியின் வாசல் அருகே இருவரும் வந்து கொண்டிருந்த போது  வெளியே செல்வதற்காக வந்த சிறுவன், இருவரையும் பார்த்து திரும்பி பள்ளியை நோக்கி சிறிது தூரம் ஓடினான். அவனிடம், 'உன்னைய பார்க்கத்தான் உதயநிதி வந்துள்ளார்' என்று அமைச்சர் கூற சிறுவன் அதைக் கேட்டு விட்டு பள்ளிக்குள் சென்றான்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில், மீம் வீடியோவை வெளியிட்டுள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, மாணவர்கள் சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கிண்டலாக கூறியுள்ளார். ஆனால் உண்மையிலே சிறுவன் எதற்காக வெளியே சென்றான் என்ற தகவல் வெளிவரவில்லை. ஆனால் இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளன.