பள்ளி சுவரில் மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த பெண் தலைமையாசிரியர் - வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளதைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, பெரியூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியில் தனலட்சுமி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் தனலட்சுமி, பள்ளி சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கச் சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் பள்ளி சுவரில் பெயிண்ட் அடித்துள்ளனர்.
இதை வீடியோ எடுத்தவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், உடனடியாக தலைமை ஆசிரியர் மீது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.