மாணவனுடன் மாயமான டீச்சரை மடக்கி பிடித்த போலீசார் - போக்சோவில் அதிரடி கைது..!

School Teacher Love Student Disappearance கைது SchoolTeacher ArrestBoscoact போக்சோ மாணவன்
By Thahir Mar 24, 2022 07:13 PM GMT
Report

திருச்சி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் தனது வகுப்பில் பயின்ற மாணவருடன் ஓட்டம் பிடித்தார் அவர்களை மடக்கி பிடித்த போலீசார் ஆசிரியையை போக்சோவில் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் சிக்கத்தம்பூரைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் தனியார் பள்ளியை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்,

அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் துறையூரைச் சேர்ந்த மாணவனும் கடந்த 5-ம் தேதி முதல் காணவில்லை. மாணவனின் பெற்றோர் மாணவனை வலைவிரித்து தேடியுள்ளனர்.

மாணவனுடன் மாயமான டீச்சரை மடக்கி பிடித்த போலீசார் - போக்சோவில் அதிரடி கைது..! | School Teacher Love Student Disappearance Arrest

ஆனால் மாணவன் எங்கும் தேடி கிடைக்காததால் கடந்த 11-ந் தேதி போலீசில் புகார் செய்தனர். அவர்கள் அளித்த புகாரில் தனது மகனை காணவில்லை என்றும் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சர்மிளா மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தனர்.

புகாரின் அடிப்படையில் மாணவனை போலீசார் முழுவீச்சில் தேடி வந்தனர்.ஆசிரியையின் செல்போனை டிரேஸ் செய்தனர்.

அப்போது இருவரும் திருவாரூர்,தஞ்சாவூர்,திருச்சி என சுற்றியுள்ளனர்.கடைசியாக திருச்சி எடமலைப்பட்டி புதுாரில் உள்ள ஆசிரியையின் தோழி வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து துறையூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று இருவரையும் துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் இருவரும் தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளி மாணவர் மைனர் என்பதால் மாணவனை காப்பகத்திற்கு அனுப்பிய போலீசார்,ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.