இன்ஸ்டா காதலனுடன் பள்ளி ஆசிரியை ஓட்டம் - கதறிய காதல் கணவன்!

Instagram Relationship
By Sumathi May 22, 2023 04:20 AM GMT
Report

இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஆசிரியை வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா காதல்

திருச்சி, கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ்(33). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நித்யா(23) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். நித்யா அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை.

இன்ஸ்டா காதலனுடன் பள்ளி ஆசிரியை ஓட்டம் - கதறிய காதல் கணவன்! | School Teacher Left With Her Lover In Trichy

இந்நிலையில் நித்யா அதிக நேரம் செல்போனில் பொழுதைக் கழித்ததாக கூறப்படுகிறது. அதில் இன்ஸ்டாகிராமில் நவீன் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக திடீரென நித்யாவை காணவில்லை.

கதறும் கணவன்

மேலும், புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் உடனே காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நித்யாவை தொலைபேசி எண்ணைக் கொண்டு தேடி வருகின்றனர்.