ஐபோன் திருட்டு - பள்ளி ஆசிரியை சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம்!
திருடர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம்
யோவிகா சவுத்ரி என்பவர் டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி முடித்து விட்டு ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் அந்த பெண் கையில் வைத்திருந்த ஐபோனை பறிக்க முயன்றுள்ளனர்.
கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது பெண் ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்து சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த பெண் ஒரு கட்டத்தில் முயற்சியை கைவிட்டார். கொள்ளையர்கள் ஐபோனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
போலீசார் விசாரணை
இதில் பலத்த காயம் அடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சாகேத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை விசாரணை நடத்தி அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.