அரசுபள்ளி ஆசிரியர் சொத்து தகராறு : 3 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு

Crime
By Irumporai Jan 25, 2023 12:31 PM GMT
Report

விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியரை அவரது சகோதரர் அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். தடுக்க வந்த மாணவர்களுக்கும் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி ஆசிரியர் தகராறு

விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில் இயங்கி வரும்விழுப்புரம் அருகே கோலியனுர் எனும் ஊரில் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ஆசிரியர் நடராஜன். இவருக்கும் இவரது சகோதரருக்கும் சொத்து தகராறு என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தனது சகோதரரை பள்ளிக்கு அருகே சந்தித்து பேசியுள்ளார் ஆசிரியர் நடராஜன். அந்த சமயம் பேச்சுவார்த்தை முற்றி ஆசிரியர் நடராஜனின் சகோதரர், நடராஜனை அரிவாளால் வெட்டியுள்ளார்.

அரசுபள்ளி ஆசிரியர் சொத்து தகராறு : 3 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு | School Teacher Brother With A Sickle

மாணவனுக்கு அரிவாள் வெட்டு 

இதனை அருகில் இருந்த பள்ளி மாணவர்கள் பார்த்துள்ளனர். உடனே அதனை தடுக்க முயன்றுள்ளனர். இதில், 3 பள்ளி மாணவர்களுக்கும் லேசான அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வளவனுர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்ட ஆங்கில ஆசிரியர் நடராஜன் மற்றும் மாணவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.