ஓ.கே. சொன்ன பெற்றோர்கள்- தமிழகத்தில் 18ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு
தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளுக்காக வரும் 18ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளன. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அனைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கருத்துகளை கேட்டனர்.
பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தமிழக முதல்வர் பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
10,11,12ம் வகுப்புகளுக்காக வரும் 18ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.