"குட்கா போடாதீங்கப்பா" - அறிவுரை கூறிய ஆசிரியரின் தலையில் குப்பையை கொட்டி அராஜகம் செய்த பள்ளி மாணவர்கள்
பிள்ளைகள் பெரும்பான்மை நேரத்தை பள்ளிகளிலேயே கழிப்பதால், அவர்களை வளர்க்கும் கடமை பள்ளி மற்றும் அங்குள்ள ஆசிரியர்களை மட்டுமே சாராது.
பெற்றோருக்கு தான் தார்மீக பொறுப்பிருக்கிறது. அதை உணர்ந்தாலே பள்ளிகளில் குற்றங்கள் குறையும்.
அதற்கு கர்நாடகாவில் அரங்கேறியிருக்கும் சம்பவமே சாட்சி.
தேவனாகிரி மாவட்டம் நல்லூரில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு படிக்கும் மாணவர்களில் சிலர் குட்கா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவார்கள் என சொல்லப்படுகிறது.
இவ்வளவு நாளும் வெளியிலேயே தூக்கியெறிந்தவர்கள் வகுப்பறையிலுள்ள குப்பை தொட்டியிலேயே காலியான குட்கா பாக்கெட்டை போட்டிருக்கிறார்கள்.
இதனை ஆசிரியர் ஒருவர் பார்த்துவிட்டு உடனே இதுபோன்று குட்கா பொருட்களை பயன்படுத்த கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.
பின்னர் வழக்கம் போல பாடம் நடத்த சென்றபோது மாணவர்களில் சிலர் கூச்சலிட்டுக் கொண்டே இருந்துள்ளனர். அவர் திரும்பி பார்த்ததும் குரலை தாழ்த்தியுள்ளார்கள்.
இப்படியே திரும்ப திரும்ப நடந்துகொண்டே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆசிரியர் தலை மீது குப்பை தொட்டியை கவிழ்த்து தாக்கியுள்ளனர்.

கடந்த 3ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவங்களை மாணவன் ஒருவன் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளான்.
ஒரு வாரம் கழித்து தற்போது அரசின் கவனத்திற்கு வந்துள்ள இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
Student of Nallur Govt school put Dustbin on Hindi teacher's head while he was lecturing , Students also attempt to assault with dustbin , few group of students found having pan masala , cigarette, gutka , and drinks . pic.twitter.com/w68txYOxvk
— Mohammed Razzack (@actrazz__626) December 11, 2021
இது குறித்து பேசியிருக்கும் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ், "ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசு எப்போதும் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவே இருக்கும். இதுகுறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இருப்பினும் தாக்கப்பட்ட ஆசிரியர், மாணவர்களின் எதிர்காலம் கருதி புகார் கொடுத்த மறுத்துவிட்டார் என சொல்லப்படுகிறது.