10ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை : பள்ளியில் அரங்கேறிய பகீர் சம்பவம்

By Irumporai Mar 11, 2023 09:56 AM GMT
Report

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தோளூர் பட்டியை சேர்ந்த கூலிவேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மௌலீஸ்வரன் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

மாணவர்கள் மோதல்

நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில், மௌலீஸ்வரன் மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படித்து கொண்டிருந்த போது சக மாணவர்கள் 3 பேர் அவரை தாக்கியதில் மாணவன் மௌலீஸ்வரன் மயக்கமடைந்துள்ளான்.

இதனை அடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொது மாணவன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

10ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை : பள்ளியில் அரங்கேறிய பகீர் சம்பவம் | School Students Arrested For Killing Student

பலியான மாணவன்

இது குறித்து குறித்து தகவலறிந்த மாணவனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலீசார் விரைந்து வந்து மாணவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 10 வகுப்பு படிக்கும் 3 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கைது செய்து திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

பின்னர் பணியின் போது பணியின் பொது கவனக்குறைவாக இருந்ததாகா தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.