புக் எடுத்துட்டு வீட்டுக்கு வரியா? மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்த பள்ளிவாசல் பள்ளி ஆசிரியர்!லீக் ஆன ஷாக் ஆடியோ!
சமீபகாலமாக பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
முதலாவதாக பிஎஸ்பிபி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாலியல் தொல்லை அளித்து வருவதாக அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தன. இந்த புகாரை அடுத்து ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அடங்குவதற்கு முன்பாகவே, சென்னையில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில், அப்பள்ளி நிறுவனர், மாணவிகளை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல்களை அளித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.இந்த புகாரை தொடர்ந்து போலி சாமியார் சிவசங்கர் பாபா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவமே பெற்றோர்களை திக்குமுக்காட செய்யும் போது, புதிதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டால் பொதுமக்கள் கதி கலங்கியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி அறிவியல் ஆசிரியர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, பள்ளியில் வைத்தே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து கையும் களவுமாக சிக்கியுள்ளார். ஆனால், அப்பள்ளி நிர்வாகம் இது குறித்து போலீசில் புகார் அளிக்காமல் அவரை காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளிக்கூடத்தில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவிகளை தனியாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்துவருகிறார் அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகமது.
யார் இந்த ஹபீப் முகமது? எப்படி மாணவிகளை சீண்டுகிறார்?
9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளை தன் வலையில் சிக்க வைக்க, தொடர்ந்து மாணவிகளிடம் தொலைபேசியில் ஆபாசமாக பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரது வீட்டிற்கு அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் உச்சக்கட்ட பாதிப்புக்குள்ளான 15 மாணவிகள் நேரடியாக காவல்துறையினரை சந்தித்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி கதறியுள்ளனர். மேலும் தொலைபேசியில் ஆசிரியர் பேசிய ஆடியோ பதிவையும் சமர்பித்தனர். இதனை தொடர்ந்து, ஹபீப் முகமதை கைதுசெய்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது..
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கல்வி பயிலும் பள்ளியிலேயே ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை கண்ட மாணவியின் பெற்றோர் அவரை கையும், களவுமாக மடக்கி பிடித்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தால் உங்கள் மகளின் வாழ்க்கை என்ன ஆகும் என கூறி, ஆசிரியரை காப்பாற்றியுள்ளனர்.
இதனால் சுதந்திரமாக திரிந்த ஆசிரியர் இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்புகளில் பயிலும் மாணவிகளை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி, புத்தகத்தை எடுத்துட்டு வா என வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
வீரம் கொண்டு எழுந்த மாணவிகள் தற்போது தைரியமாக புகார்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், அவரோடு உரையாடிய ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
சமூகம் எங்கே செல்கிறது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே காம கொடூரர்கள் ஆனால், நாடு என்ன ஆகும் என பொதுமக்களும், பெற்றோர்கள் கதறி வருகின்றனர். ஆன்லைன் வகுப்பிலேயே ஆசிரியர் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இந்த கொடூரர்கள் செய்யும் லீலைகள் இவ்வளவு என்றால், பள்ளி திறந்த பிறகு எப்படி மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவது என பெற்றோர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த ஒரு மாத காலத்திலேயே இதோடு சேர்த்து 3 பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்துள்ளது. இதனை தற்போதைய திமுக ஆட்சி எப்படி கையாளும் என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.