மாணவிக்கு அடிக்கடி ஆபாச படத்தை போட்டு காட்டி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!
பிளஸ்- 2 மாணவிக்கு செல்போனில் அடிக்கடி ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த மகேந்திரன் அதே பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் இவருக்கு குழந்தை இல்லை. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விவாகரத்து செய்து விட்டார் தனியாக வாழ்ந்து வந்த மகேந்திரன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
அப்பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இரண்டாவது மனைவியின் மகள் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமியின் மீது மகேந்திரனுக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அடிக்கடி அந்த சிறுமியிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஆரம்பத்தில் தனது தாயிடம் இதை சொல்ல பயந்து மறைத்து வந்த சிறுமி ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் தனது தாயிடம் சொல்லி அழுது இருக்கிறா.ர் இதனால் அதிர்ந்து போன அந்த இளம்பெண், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டார்.
புகாரின்பேரில் மகேந்திரனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிளஸ்டூ மாணவியான அந்த சிறுமிக்கு அடிக்கடி செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை செய்தது உறுதியானது. இதையடுத்து மகேந்திரனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.