ஆசிரியை சபரிமாலாவை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
கோவை: கோவையில் +2 மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு,
ஆசிரியை சபரி மாலா செஞ்சிலுவை சங்கம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் கைது செய்தனர்.
கோவையில் +2 மாணவி ஆசியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது லாக்டவுனை தொடர்ந்து வெளிவந்திருக்கும் மூன்றாவது நிகழ்வு என ஆசிரியை சபரி மாலா வேதனை தெரிவித்தார்.
மேலும் எத்தனை மாணவிகள் தற்கொலை, மற்றும் பைத்தியம் பிடித்திருக்கிறார்களா என தெரியவில்லை. அதற்கான பட்டியல் இல்லை என குற்றம் சாட்டினார்.
மாணவிகளால் தான் பாதுகாப்பான நாட்டை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையளித்து வந்ததாகவும் தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அதற்காக தான் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதாக சபரிமாலா போராட்டத்தின் போது தெரிவித்தார்.
இதனையடுத்து அவரை போலீசார் வாகனத்தில் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.