கோவை பள்ளி மாணவி தற்கொலை: உரிய நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

Sucide School Vijayakanth Student Dmdk
By Thahir Nov 13, 2021 11:10 PM GMT
Report

கோவையில் பாலியல் தொல்லைக்குள்ளான பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில்

அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த 17 வயது பள்ளி மாணவி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவர்

அளித்த தொடர் பாலியல் தொல்லைகளால் தற்கொலை செய்துகொண்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கோவையில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "மாணவி மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.