காதல் விவகாரத்தால் பதினொன்றாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை ? - போலிசார் விசாரணை
திருத்துறைப்பூண்டி அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பாரதியார் தெருவை சேர்ந்தவர்கள் மாரிமுத்து- கஸ்தூரி தம்பதி. இவர்களது 15 வயதுள்ள மகள் சந்தியா அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பாமணி சிவன்கோவில் தெரு, பணைடியில் வசித்து வரும் பாலு மகன் லோகேஷ் உடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த தந்தை மாரிமுத்து கண்டித்ததையடுத்து லோகேஷுடன் பேசாமல் இருந்துள்ளார் சந்தியா.
நேற்று முன்தினம் சந்தியாவுக்கு செல்போனில் அழைப்புவந்து லோகேஷுடன் பேசியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சந்தியா.
இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தியாவின் தந்தை மாரிமுத்து தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின்பேரில் போலிசார் வழக்குபதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.