திருவள்ளூர் அருகே ப்ளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை..!
திருவள்ளூர் அருகே கீழேச்சேரியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த +2 மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி துாக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே ப்ளஸ் 2 மாணவி விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் கலவரம் ஏற்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியது.
இந்த நிலையில் திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விடுதி அறையில் இருந்த நண்பர்கள் உணவருந்த சென்ற நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவியின் தற்கொலையை அடுத்து பள்ளி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.