பள்ளிகள் திறப்பில் மாற்றம் ஏற்படுமா? கம்யூனிஸ்ட் கட்சி வைத்த கோரிக்கை

Vijay Tamil nadu C Joseph Vijay
By Manchu May 26, 2026 02:20 PM GMT
Report

பள்ளிகள் திறக்கப்படுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி திறப்பு

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையினை, தலைமைச்செயலகத்தில் நேற்று அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜுன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதை முன்பே அறிவித்திருந்த நிலையில், மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், அறிவியல் பூர்வமான தகவலை கேட்டு வருவதாக கூறியுள்ளார்.

பள்ளிகள் திறப்பில் மாற்றம் ஏற்படுமா? கம்யூனிஸ்ட் கட்சி வைத்த கோரிக்கை | School Reopen Date Is Postponed For One Week

அதாவது வெயிலின் தாக்கம் அதிகரிக்குமா? பருமழை தொடருமா என்பதை குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.  இந்த அறிக்கைகளைப் பெற்ற பின்பு முதலமைச்சரிடம் சமர்பித்து கலந்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளார்.

கோவை சிறுமி காணாமல் போகும் போது தாய் போதையில் இருந்தாரா?

கோவை சிறுமி காணாமல் போகும் போது தாய் போதையில் இருந்தாரா?

பின்பு செய்தியாளர்கள் முன்கூட்டியே அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்ட போது, தமிழ்நாட்டில் கல்விக்கான மொத்த கற்பித்தல் நேரம் 1050 ஆக இருந்ததை தற்போது 950 ஆக குறைத்துள்ளதாகவும், 10 நாட்கள் பள்ளிகள் திறக்கப்படுவதை தள்ளிபோட்டாலும், அதற்காக கூடுதல் வகுப்பு நடத்தப்படும் என்ற சிக்கல் உள்ளதாக கூறப்படுகின்றது. 

பள்ளிகள் திறப்பில் மாற்றம் ஏற்படுமா? கம்யூனிஸ்ட் கட்சி வைத்த கோரிக்கை | School Reopen Date Is Postponed For One Week

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பள்ளி திறப்பினை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளனர். அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே கோடைவிடுமுறைக்கு பின்பு ஜுன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவித்திருந்த நிலையில், கம்யூனிஸ்ட் வைத்துள்ள கோரிக்கையால் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.