பள்ளிகள் திறப்பு எப்போது? முடிவை அறிவித்த அமைச்சர்!

minister open school tn
By Anupriyamkumaresan Jul 06, 2021 04:40 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், மாநிலம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள் என குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டுமே தடைகள் தொடர்ந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு எப்போது? முடிவை அறிவித்த அமைச்சர்! | School Open Minister Anbilmahesh Byte

கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்ற நிலையில் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாவதாக மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பல தரப்பினரும் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு எப்போது? முடிவை அறிவித்த அமைச்சர்! | School Open Minister Anbilmahesh Byte

இது தொடர்பாக திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என்ற கருத்துக்களே அதிகம் வருகின்றன என்றும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் முடிவுகளின் படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.