பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- எந்தெந்த மாவட்டங்களில்? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
By Fathima
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை நிலவரப்படி அதிகபட்சமாக காரைக்காலில் 16 செ.மீ, நாகையில் 15 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.