வரும் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை? அமைச்சர் சொன்ன பதில் என்ன ?
பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறையாக உள்ளது.
விடுமுறை இல்லை
இந்த நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி 18 ஆம் தேதி புதன்கிழமை விடுமுறை என இணையத்தில் செய்திகள் வெளியானது
அமைச்சர் அறிவிப்பு
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பொங்கலுக்கு பின் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை தருவது பற்றி அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனால்; வழக்கம் போல் பள்ளிகள் வரும் புதன்கிழமை செயல்படும் என்பது உறுதியாகியுள்ளது.