ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Tamil nadu Lok Sabha Election 2024
By Jiyath Apr 06, 2024 06:13 AM GMT
Report

பள்ளி மாணவர்களின் விடுமுறை தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மக்களவை தேர்தல்

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! | School Holidays In April Important Update

இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே தமிழகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ம் தேதியன்று பொது விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தியாவில் ஒரு 'மினி தாய்லாந்து'.. அருவியும், அடர்ந்த காடுகளும் - எங்க இருக்கு தெரியுமா?

இந்தியாவில் ஒரு 'மினி தாய்லாந்து'.. அருவியும், அடர்ந்த காடுகளும் - எங்க இருக்கு தெரியுமா?

விடுமுறை 

இந்நிலையில் மக்களவை தேர்தல் பணிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஈடுப்படுத்தப்பட இருக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு,

ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! | School Holidays In April Important Update

ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மீண்டும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.