காதலிக்கு தெரியாமல் தோழியுடன் சென்ற காதலன்... நடுரோட்டில் கட்டி புரண்ட மாணவிகள் - வைரல் வீடியோ
பெங்களூருவில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நடுரோட்டில் சண்டையிட்டு கொள்வது அதிகரித்து வருகிறது. சாதி பிரச்சனை தொடங்கி காதல் பிரச்சனை வரை இவர்களிடையே கடும் மோதல் போக்கை விளைவித்து வருகிறது.
அந்த வகையில் பெங்களூரின் புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் இருபிரிவினராக பிரிந்து சண்டையிட்டு கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு அடித்துக் கொள்வதும், இரும்பு கதவுகளில் தலையை கொண்டு மோத செய்வதும் என பார்ப்பவர்களை அந்த வீடியோ அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
இதில் ஒரு மாணவி தாக்கப்பட்டதில் மூக்கு உடைந்தது. அவரை காதலன் என சொல்லப்படும் மாணவன் பாதுகாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. இந்த மோதலுக்கான சரியான காரணம் முழுமையாக தெரியவில்லை என்றாலும் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் இதுவரை விளக்கமளிக்கவில்லை.
அதேசமயம் காதலனுக்காக இருதரப்பு மாணவிகள் மோதிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிக்கு தெரியாமல் அவரது ஆண் நண்பர் வெளியே அழைத்துச்சென்று வந்துள்ளார். இதுதான் இந்த சண்டைக்கு காரணம் என கூறப்படுகிறது