பொங்கல் கொண்டாட சென்ற பள்ளித்தோழிகள்: விபத்தில் அனைவரும் பலி- வைரலாகும் கடைசி செல்பி

accident girls karnadaka
By Jon Jan 16, 2021 09:31 AM GMT
Report

கர்நாடகாவில் டிரக்கும், டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த 10 பேரும் பள்ளித்தோழிகள் என தெரியவந்துள்ளது. கர்நாடகாவின் ஹுப்பள்ளி - தர்வாத் பைபாஸ் சாலையில் தர்வாத் நகருக்கு 8 கி.மீ. தொலைவில் டிரம்பும், டெம்போவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.

மணல் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி, முன்னே சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது, எதிரே வந்து கொண்டிருந்த டெம்போ வேனுடன் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேனில் இருந்த 8 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

மற்ற மூன்று பேரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் விசாரணையில் இவர்கள் அனைவரும் பள்ளித் தோழிகள் என்பதும், பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக கோவா சென்றதும் தெரியவந்துள்ளது. அத்துடன் வெள்ளியன்று காலை தேவநாகரியிலிருந்து புறப்பட்டு காலை உணவு சாப்பிடுவதற்காக தர்வாத் வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தங்களது சுற்றுலாவை தொடங்கும் முன்பு, தேவநாகரியில் டெம்போவில் இருந்தபடி ஒரு செல்ஃபியை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர், அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Gallery