திருப்பத்தூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி லாரியில் சிக்கி பலி

girl death school spot road accident
By Praveen May 03, 2021 05:49 PM GMT
Report

திருப்பத்தூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி லாரியில் சிக்கி பலியான பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளி பட்டு ஊராட்சி மின் நகர் பகுதியைச் சார்ந்த தண்டபாணி கூலி தொழிலாளி (37) இவருடைய மகள் அட்சயா (15) இவர் கசிநாயக்கன் பட்டியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில் மின் நகரிலுள்ள அவரது வீட்டில் இருந்து திருப்பத்தூரிலிருந்து கந்திலி வழியாகச் செல்லும் சாலையில் கடைக்கு செல்ல தங்களுடைய இருசக்கரவாகனம் ஆன ஸ்ப்ளெண்டர் ப்ளாஸ் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்ற பொழுது வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (49) தங்கள் சொந்த வேலைக்காக லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் வழியாக கந்திலி செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக நேருக்கு நேராகா மோதி அட்சயா லாரியில் மாட்டிக்கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் திருப்பத்தூர் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அட்சாயாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடைக்குச் செல்ல தங்களுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் லாரியில் மாட்டிக்கொண்டு விபத்துக்கு உள்ளான சம்பவம் பெற்றோர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பத்தூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி லாரியில் சிக்கி பலி | School Girl Road Accident Death Spot

திருப்பத்தூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி லாரியில் சிக்கி பலி | School Girl Road Accident Death Spot