காதல் தகராறு; முள் புதருக்குள் கிடந்த 10ம் வகுப்பு மாணவி - இளைஞர் கொடூர செயல்!
காதல் தகராறில் 10ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கொலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரேணுகா (14). இவர் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற 21 வயது இளைஞரும், ரேணுகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ரேணுகா வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும், சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்த்தில் புகார் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடிவந்தனர். இதில் செல்போன் மூலம் துப்பு துலக்கியதில் ரேணுகா கடைசியாக யோகேஸ்வரனிடம் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து யோகேஸ்வரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், ரேணுகாவை கொலை செய்து விட்டதாக யோகேஸ்வரன் கூறியுள்ளார்.
இளைஞர் கைது
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை கொலை செய்யப்பட இடத்திற்கு அழைத்து வைத்தனர். பின்னர் அங்குள்ள முள் புதரில் கிடந்த ரேணுகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வரனை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது "கடந்த 6 மாதங்களாக யோகேஸ்வரன் ரேணுகாவை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் யோகேஸ்வரன், ரேணுகாவை தாக்கியுள்ளார்.
பின்னர் அவரின் சுடிதாரின் துப்பட்டாவை கொண்டு சிறுமியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.