பள்ளி மாணவியை கடத்தி நண்பர் வீட்டில் வைத்திருந்த இளைஞர் ! அடுத்த என்ன நடந்தது?
ஈரோடு அருகே பள்ளி மாணவியை கடத்தி நண்பர் வீட்டில் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் கௌதம் என்ற இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக கூறி, மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் கௌதமின் உறவினர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அச்சத்தில் மாணவியை ஊருக்குள் விட்டுவிட்டு கௌதம் தப்பி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தன்னை காதலித்து வந்த கவுதம் திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றதாகவும் கோவையில் உள்ள நண்பர் வீட்டில் தங்க வைத்திருந்ததாகவும் அங்கே உள்ள ஒரு கோயிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லி இருக்கிறார்.
இதையடுத்து கௌதம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.