பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரம்.. சிக்கி உயிரிழந்த சிறுமி - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

Tamil nadu Thanjavur Death
By Vinothini Aug 30, 2023 04:40 AM GMT
Report

மரம் முறிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காற்றுடன் மழை

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுடைய மூத்த மகள் சுஷ்மிதாசென்(வயது 15). கணபதி கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகள் ராஜேஸ்வரி(15). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள புனித கபிரியேல் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.

school-girl-dead-by-falling-tree

இவர்கள் வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது இருவரும் வெளியேறும்பொழுது அங்கு இருந்த தூங்கு மூஞ்சி மரம் திடீரென வேரோடு சாய்ந்து அந்த சிறுமிகள் மீது விழுந்தது.

முதல்வர் நிவாரணம்

இந்நிலையில், பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பொழுது சுஷ்மிதாசென் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண அறிக்கை வெளியிட்டுள்ளார்.

school-girl-dead-by-falling-tree

அதில், "இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செல்வி இராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

மாணவி சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வி இராஜேஸ்வரிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் நிதியதவி வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.