கதற கதற பள்ளி சிறுமியை நண்பனுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த இளைஞன் - பரபரப்பு சம்பவம்
புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளாறு தேனூரை சேர்ந்த பள்ளி சிறுமி செல்போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளாள்.
அப்போது, சமூகவலைத்தளம் மூலம் திருநள்ளாறு அடுத்த நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவை சேர்ந்த நந்தா என்ற நந்தகுமார் சிறுமியிடம் நட்புடன் பழகி வந்துள்ளான்.
இவர் நட்பு இன்னும் ஆழமாக சென்றது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு நந்தா சிறுமியை பார்க்க அழைத்துள்ளார். சிறுமியும் நந்தாவை நம்பி வந்துள்ளார். சிறுமி வந்ததும், நந்தாவும், அவரது நண்பர் ராம்குமார் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமி கத்தியதால், யாரும் இல்லாத இடத்திற்கு சிறுமியை பலவந்தாக அழைத்துச் சென்று நந்தாவும், ராம்குமாரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், இதைப் பற்றி வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று இருவரும் சிறுமியை மிரட்டியுள்ளனர். இவர்களின் மிரட்டலுக்கு பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளாள்.
சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். சிறுமி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
உடல் பாதிக்கப்பட்ட சிறுமியை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்துள்ளனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நந்தகுமார் மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்துள்ளனர்.