பாடம் நடத்திய ஆசிரியரை பல்லக்கில் சுமந்த முன்னாள் மாணவர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்
பாடம் சொல்லி கொடுத்த ஆசியரை பல வருடங்கள் கழித்து அவரின் முன்னாள் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் தூத்துகுடியில் நடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் தூய தெரசாள் நடுநிலைப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் வில்சன் வெள்ளையா . இவர் 1961 -ல் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அப்போது இவரிடம் படித்த மாணவர்கள் பலர் மருத்துவராகவும் , பொறியாளராகவும் உள்ளனர் நல்லாசிரியர் விருது பெற்ற வில்சன் 2000 - ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.
பல்லக்கில் தூக்கி சென்ற மாணவர்கள்
இந்த நிலையில் அந்த பள்ளியில் 1988- 89ஆம் ஆண்டு அவரிடம் படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் வில்சன் வெள்ளையாவுக்கு விழா எடுக்க முடிவு செய்தனர். குறிப்பாக பல்லக்கில் அமர வைத்து செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வர ஆசைப்பட்டனர். அதன்படி ஆசிரியர் வில்சன் வெள்ளையாவினை முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பல்லக்கில் அமர வைத்து ஒவ்வொரு இடமாக தூக்கி சென்றனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். முன்னாள் மாணவர்களின் அனபை கண்டு வியந்த ஆசிரியர் வில்சன் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தன. வயோதிகத்தால் தள்ளாடினாலும் தன் முன்னாள் மாணவர்களின் செயலை பாரட்டினார்.
இன்றைய காலத்தில் பெற்ற குழந்தைகளே பெற்றோர்களை பாரமாக பார்க்கும் இந்த காலத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியரை பல்லக்கில் சுமந்து சென்ற சம்பவம் அப்ப்குதி மக்களிடையே மகிழ்ச்சியினையும் நெகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது