தமிழ்நாடு பட்ஜெட்; பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு - பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

M K Stalin Government of Tamil Nadu Palanivel Thiagarajan Anbil Mahesh Poyyamozhi
By Thahir Mar 20, 2023 05:45 AM GMT
Report

பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

இதில், மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம், காலை உணவு திட்டம் , சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம் என பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் நிதியமைச்சர் அறிவித்து வருகிறார் .

school-education-rs-40-299-crore-allocation

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்

* தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

* சங்கமம் கலைவிழா வரும் ஆண்டுகளில் மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.

* வருவாய் பற்றாக்குறையை ரூ.30,000 கோடி அளவிற்கு குறைத்துள்ளோம்.

* சென்னை பெருவெள்ளம், கொரோனா உள்ளிட்டவற்றை சந்தித்த போது நிதி நெருக்கடி அதிகம் ஏற்பட்டது.

* 2006 - 2011ல் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதகமாக இருந்த மாநில வரி வருவாய் 2021ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 5.5% ஆக இருந்தது.

* மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.

* அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்.

* வயது முதிர்ந்த மேலும் 590 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை.

* தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* 25 இடங்களில் நாட்டுப்புற, கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

* இலங்கை தமிழர்களுக்கு 3959 வீடுகள் கட்ட ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு.

* மருத்துவதுறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு.

* மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நுாலகம் வரும் ஜுன் மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிப்பு.

* ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தயாராகும் 1000 மாணவர்களுக்கு உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

* சென்னை ஸ்டான்லி, மருத்துவமனை, செவிலியர் பயிற்சி பள்ளி விடுதியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

* கிண்டியில் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டே திறக்கப்படும்.

* அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.

* பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாடு பட்ஜெட்; பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு - பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு | School Education Rs 40 299 Crore Allocation

* தொழிற்சாலைகளிலும் மக்களை தேடி மருத்துவ திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

* சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

* 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்.

* புலம் பெயர்ந்தவர்களுக்கும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் சிகிச்சையளிக்கப்படும்.

* மருத்துவதுறைக்கு 18,661 கோடி நிதி ஒதுக்கீடு.

* தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.2,877 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

*  வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

* சென்னை அம்பத்துாரில் இளைஞர்களுக்கான நவீன வசதிகளுடன் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

* மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

* எண்ணும் எழுத்தும் திட்டம் ரூ.100 கோடியில் 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

* கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள சிப்காட் மேம்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத் தொகை இரு மடங்காக ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு உயர்கல்வித்துறைக்கு ரூ.6957 கோடி நீதி ஒதுக்கீடு.

* 26 தொழில்நுட்பக் கல்லுாரிகள், 55 கலை கல்லுாரிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

*  முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. இதனால் தமிழ்நாட்டில் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

*  சென்னை ஜவர்ஹலால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு