6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை

reopen results exam
By Jon Feb 12, 2021 02:27 PM GMT
Report

6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் இருந்து பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில், கடந்த மாதம் 19ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோரின் அனுமதிக் கடிதத்துடன் பள்ளிக்கு வர அரசு அனுமதி அளிக்கபட்டு கடந்த 8ம் தேதி தொடங்கி 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் தொடங்கியுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பிற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்பட்டது. இதனால் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இன்றைய சூழலில் 6,7,8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை எனவும் தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதாகவும்மேலும், 6,7,8ம் வகுப்பு மாணவர்கள் தங்களது படிப்பினை தொடர டேப் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.