பள்ளியில் நடனமாடி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்: மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்கள்
கொரோனா பாதிப்புக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து நடனமாடி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள். கொரோனா வைரஸ் தொற்று கல்வித்துறையில் அதிகளவில் மாற்றங்களை ஏற்பட்டுத்தியுள்ளன. கல்லூரி மற்றும் பள்ளிகளில் பெரும்பாலான வகுப்புகள் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த புதன்கிழமை, புனேவில் பிரபாத் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு 5-ம் வகுப்பு மாணவர்கள் வந்தபோது, ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் வேலை செய்யும் இதர பணியாளர்கள் மாணவர்களை நடனம் ஆடி பள்ளிக்கு மீண்டும் வரவேற்றுள்ளனர்.
பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய வெல்கம் டான்ஸ் குறித்த வீடியோ பெற்றோர்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.