இந்த மாவட்டங்களில் எல்லாம் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

chennai school tamilnadu colleges 4 districts
By Anupriyamkumaresan Nov 07, 2021 10:16 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதை ஒன்றிரண்டு நாட்களுக்கு தள்ளிப்போட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த மாவட்டங்களில் எல்லாம் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை | School Collges Leave For 4 Districts

இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வடசென்னை, மத்திய சென்னையில் மழை வெள்ளம் தேங்கியுள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மழை வெள்ளத்தை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டடார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளை அதிகாரிகள் 24 மணி நேரமும் காண்காணித்து வருகின்றனர். தேவைக்கு ஏற்ப உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் எல்லாம் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை | School Collges Leave For 4 Districts

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றுள்ள மக்கள் சென்னை திரும்புவதை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப்போட கேட்டுக்கொள்கிறேன் என்றார்