திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (பிப்ரவரி 12) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மாலை தொடங்கி இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் பொதுமக்களிடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை (பிப்ரவரி 12) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.