பள்ளி மற்றும் கல்லூரிகளை நாளை திறக்க உயர்நீதிமன்றம் தடை
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
தற்போது, தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும், மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால், கல்வி நிலையங்களை திறக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் நாளை (1ம் தேதி) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசின் அறிவிப்புக்கு தடை விதித்துள்ளனர்.
தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 29ம் தேதி நிலவரப்படி, புதிதாக 257 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.