நாளை பள்ளி கல்லுாரிகள் திறப்பு - கல்வி நிலையங்கள் துாய்மைய்படுத்தும் பணி மும்மூரம்
தமிழ்நாட்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஒன்றாம் தேதி முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவலின் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் வரும் 15ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அறிவித்தவாறு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும்,திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் தொடரும் என்று அறிவித்துள்ளார்.
9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் ஒன்றாம் தேதி முதல் திறக்கப்படும் நிலையில், மாணவ, மாணவியருக்கான அரசு மற்றும் தனியார் விடுதிகள் இயங்கவும் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளி,கல்லுாரிகள் சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது .