5 மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை

College School Leave Tamilnadu
By Thahir Nov 19, 2021 03:05 PM GMT
Report

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நடப்பு ஆண்டு பருவமழைக் காலம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் மழை பெய்தது.

அடுத்த 24 மணி நேரத்தில், ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நிவராண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடுக்குத்தகை, பாடியநல்லூர், கள்ளூர், ஆட்ரம்பாக்கம், ராமஞ்சேரி, மதுரா, புதூர் ஆகிய பகுதிகளில் நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.