நாளை பள்ளி,கல்லுாரிகளுக்கு பொது விடுமுறை - முதலமைச்சர் உத்தரவு..!
பஞ்சாப் மாநிலத்தில்,மாவீரர்கள் தினத்தை ஒட்டி நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பகவந்த் மான்,
சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 ஆம் தேதியான மாவீரர்கள் தினத்தை ஒட்டி, பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் காலன் கிராமத்திற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என பஞ்சாப் மாநில மக்களை கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவை வளாகத்தில் சட்ட மேதை அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் சிலைகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.
மார்ச் 23 ஆம் தேதி நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பள்ளி,கல்லுாரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.