? Live: சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

Kanchipuram TN Weather Weather Mandous Cyclone
By Thahir Dec 09, 2022 10:15 AM GMT
Report

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், வேலுார், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

? Live: சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை | School College Holiday Due To Mandous Cyclone

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வழுவிழந்தது, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. 

கடந்த 5ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது.

பின்னர் வட-மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ துாரத்தில் மையம் கொண்டுள்ளது.

இந்த நிலையில் புயலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், வேலுார், செங்கல்பட்டு,  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.