கன மழை எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.
இந்நிலையில் நாளை, திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்த எச்சரிக்கையில் கூறியிருந்தது.
விடுமுறை அறிவிப்பு
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.
இதேபோல் கனமழை காரணமாக கடலூரிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.