தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Diwali
By Thahir Oct 25, 2022 01:11 AM GMT
Report

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டியிருந்த, இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | School College Holiday Announcements

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.