நைஜீரியாவில் பணத்திற்காக 73 பள்ளி மாணவர்கள் கடத்தல் - அதிர்ச்சியில் பொதுமக்கள்

nigeria schoolchildrenabducted
By Petchi Avudaiappan Sep 02, 2021 05:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 நைஜீரியாவில் 73 பள்ளி மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சாம்பாரா மாகாணத்தில் காயா என்ற ஊரில் தான் இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு பள்ளியில் நேற்று துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் 73 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் பள்ளி மாணவர்கள் கடத்தப்படுவதும், பெற்றோரிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக்கொண்டு மாணவர்களை கடத்தல்காரர்கள் விடுவித்து விடுவதும் வழக்கமான நிகழும் சம்பவமாகும்.

அதேசமயம் பணம் கிடைக்காவிட்டால் பள்ளி மாணவர்களை கொல்லும் நிகழ்வுகளும் நடைபெறும். கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆயிரம் மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ள நிலையில் கடத்தல்காரர்கள் பிடியிலிருந்து மாணவர்களை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.