எல்லா தரப்பு ஊடகவியலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்குக': திருமாவளவன் கோரிக்கை

covid19 journalist dmk thirumavalavan
By Irumporai Jun 02, 2021 01:37 PM GMT
Report

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் உதவித்தொகை ரூ.5,000, கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பானது, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்

இந்த நிலையில் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஊடகவியலாளர்களுக்கு அரசு அங்கீகாரம் என்பது தற்போது மிகச் சிலருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.

உண்மையாகவே  உதவித்தொகை தேவைப்படும் ஊடகவியலாளருக்கு இந்த தொகை கிடைப்பதில்லை எனவே  அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களின் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து ஊடகவியலாளருக்கும் ரூ. 5,000 உதவித்தொகையும் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம் நிவாரணம் கிடைக்க  உறுதி செய்யுமாறு பணிவோடு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.