இந்தியாவின் வெள்ளி மங்கை மீராபாய் சானு சாதித்த பின்னணி...!

Tokyo Olympics Chanu Saikhom Mirabai Powerliftings
By Petchi Avudaiappan Jul 24, 2021 02:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிபதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானுவின் பெயரை தான் ஒட்டுமொத்த இந்திய தேசமும் உச்சரித்து கொண்டிருக்கிறது. 

இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவின் சொந்த மாநிலமான மணிப்பூரில் நோங்பாக் காக்சிங் நகரம் தான் மிராபாய் பானுவின் சொந்த ஊராகும்.அவர் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது விடுமுறை நாளில் டிவியில் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்ப்பது வழக்கம். அப்படி ஒருநாள் பார்த்தபோது 2004 ஒலிம்பிக்கின் பளு தூக்குதலில் குஞ்சரணி தேவி அசத்தியுள்ளார்.

இந்தியாவின் வெள்ளி மங்கை மீராபாய் சானு சாதித்த பின்னணி...! | Schanu Saikhom Mirabai Won Silvermedal In Olympics

அதுதான் தனக்கு பளு தூக்குதலில் வெல்ல ஆரம்ப களமாக அமைந்ததாக கூறும் மீராபாய் "தன் கிராமத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் மன்றத்திற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கூடுதல் பயிற்சிக்காக சைக்கிளில் பயணம் செய்து தனது ஆசையை வளர்த்துள்ளார். வறுமையால் மீராபாய் ஸ்டாமினாவை அதிகரிக்க பால் கூட வாங்கி பருக முடியாத சூழலில் வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தனது முத்திரையை பதித்தார்.

2013ல் ஜுனியர் பிரிவில் நாட்டின் சிறந்த வெயிட் லிப்டர் என்ற பட்டத்தை மீராபாய் வென்றார் . அதன்பின் பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் தங்கி பயிற்சி பெரும் வாய்ப்பை பெற்ற அவரை பெற்றோர் தடுத்துள்ளனர். ஆனால் 2016 ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் நான் பங்கு பெறுவேன்.

அந்த வாய்ப்பை இழந்தால் வீட்டுக்கே திரும்பி விடுகிறேன் என உறுதியளித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அங்கு அவருக்கு அவரின் கனவுக்கு விதைப் போட்ட குஞ்சராணி தேவி தான் பயிற்சியாளர். அதனால் தேசிய போட்டிகளில் அசத்தி 2014 ல் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் பங்குபெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய். அதன் மூலமாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று 48 கிலோ எடைப்பிரிவில் ஆறாது இடம் பிடித்தார்.

இந்தியாவின் வெள்ளி மங்கை மீராபாய் சானு சாதித்த பின்னணி...! | Schanu Saikhom Mirabai Won Silvermedal In Olympics

பின் 2017 ஆம் ஆண்டு உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் 194 கிலோவை அசால்டாக தூக்கி நிறுத்தி தங்கம் வென்று மீராபாய் அசத்தினார். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது இலட்சியம் என களமிறங்கிய மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.