அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை - அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்..!

V. Senthil Balaji R. N. Ravi Supreme Court of India
By Karthick Jan 05, 2024 06:44 AM GMT
Report

அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செந்தில் பாலாஜி 

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றார். அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட நிலையிலும், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கையை எதிர்க்கட்சிகள் அதிகளவில் எழுப்பி வருகின்றன.

sc-slams-rnravi-in-senthil-balaji-case

இது குறித்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில், அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர பிரச்சனையில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.


sc-slams-rnravi-in-senthil-balaji-case


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சராக தொடருவதில் தடையில்லை என தீர்ப்பளித்து, அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.