உதயநிதி சனாதன பேச்சு - தமிழக அரசிற்கு அதிர்ச்சி அளித்த உச்சநீதிமன்றம்
உதயநிதியின் சனாதன பேச்சுக்கள் குறித்தான வழக்கில் தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் அதிர்ச்சியளித்துள்ளது.
உதயநிதி பேச்சு
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
மேலும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம், சனாதன சர்ச்சை விவகாரத்தில் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். மேலும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன எதிர்ப்புப் பேச்சு பேசியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று இந்த வழக்கின் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில், விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இது என சுட்டிக்காட்டி வாதிடப்பட்டு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் தொடர்ந்த மனு தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்கவும் உச்சநீதிதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.