நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சீமான் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி 2011ல் போலீசில் புகாரளித்தார்.
இதனால் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த புகாரை 12 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதில் இரு தரப்பும் பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தியது. ஆனால், சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டுமென விஜயலட்சுமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், சீமான் செப்டம்பர் 24க்குள் அவர் மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோரத் தவறினால், சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். விஜயலட்சுமியுடன் சுமுகமாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.