30 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமின் - உச்சநீதிமன்றம் உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று முக்கிய வழக்கான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேரறிவாளன் முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு,நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய கொலை வழக்கு எனவே ஆழமா சிந்தித்து விசாரிக்க வேண்டும் என்றனர்.
மேலும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட அனைத்தும் குடியரசு தலைவரின் அதிகாரங்களுக்கு உட்பட்டது.
என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.இந்நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது
எனவே அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.